Home Archive by category

“13 இல்“ பொலிஸை தவிர்த்து ஏனைய அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி இணக்கம் : நிராகரித்த தமிழ் கட்சிகள்

13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த முழு ஏனைய அதிகாரங்களுடனான 13வது திருத்தத்தை அமுல்படுத்தும் திட்டம் குறித்து ஜனாதிபதி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டிற்கு உட்பட்டு இந்த அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

என்றாலும், ஜனாதிபதியின் முன்மொழிவுகளை தமிழ் கட்சிகள் நிராகரித்துள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரங்களை தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து ஜனாதிபதி கருத்து வெளிட்டிருந்தார். அவற்றை நடைமுறைப்படுத்தும் முன்மொழிவுகளையும் அவர் வழங்கியிருந்தார். ஆனால், நாம் அதனை முற்றாக நிராகரித்துவிட்டோம்.

அவரது முன்மொழிவில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் திட்டம்கூட இல்லை. 13ஆவது திருத்தச்சட்டத்தில் இருக்கு அதிகாரங்களை இல்லாதொழிக்கும் “13- ஐ“ நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்றார்.

Related Posts