Home Archive by category

புதுப்பொலிவுடன் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள காமராஜரின் ‘செவ்ரோலெட் ஸ்டைல்லைன் டீலக்ஸ்’

காமராஜர் பயன்படுத்திய செவ்ரோலெட் கார், பழைமை மாறாமல் புதுப்பொலிவுடன் சென்னை காமராஜர் அரங்கத்தில் மீண்டும் மக்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

பெருந்தலைவர் என்று தமிழ்நாடு மக்களால் அழைக்கப்பட்டவர் காமராஜர்.

இவர் தமிழகத்தில் முதல்வராக இருந்த போது ஏழை மக்களுக்கு அது பொற்காலமாகும்.

அந்த அளவிற்கு அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு அவரை தனது உதவிகளை அவரது திட்டத்தின் மூலம் நிறைவேற்றினார்.

அன்றைய காலக்கட்டத்தில் காமராஜர் தமிழக காங்கிரஸின் தலைவராக இருந்தபோது, அப்போதைய மாபெரும் தொழிலதிபர் டி.வி.சுந்தரத்தினால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ‘செவ்ரோலெட் ஸ்டைல்லைன் டீலக்ஸ்’ கருப்பு நிற காரை பரிசளித்தார்.

1952இல் அறிமுகமான செவ்ரோலெட் ஸ்டைல்லைன் டீலக்ஸ் காரை காமராஜர் பயன்பயத்தியபோது கார் எண் எம்டிடி 2727.

இந்த காரில்தான் காமராஜர், தமிழகம் முழுவதும் சுற்றி வந்து தன் கட்சிப் பணிகளை முன்னெடுத்தார்.

காமராஜர் 1954இல் தமிழக முதல்வரான பிறகும், அரசால் வழங்கப்படும் காரை பயன்படுத்தாமல், செவ்ரோலெட் காரிலேயே பயணித்தார்.

1963 இற்கு பின்னர் தன் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர், கட்சி நடவடிக்கைகளுக்கென சென்னையைச் சேர்ந்த காப்பித் தூள் வியாபாரி சோமசுந்தர நாடாரிடம் தன் காரை விலைபேசினார்.

இதனை அறிந்த கவிஞர் கண்ணதாசன்4, “கார்முகில் வண்ணன் கண்ணபிரான் ஏறிய தேரில், காப்பித் தூள் கடைக்காரரா..!’என தான் நடத்திவந்த தென்றல் பத்திரிக்கையில் கவிதை எழுதினார்.

சில காலங்கள் கழித்து இந்த கார் சென்னை காமராஜர் அரங்கத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

பல தசாப்தங்களாக ஒரே இடத்தில் நின்ற கார் பயன்படுத்தாமல் அப்படியே பொலிவிழந்து,பாழடைந்து போனது.

தற்போது காமராஜரின் 121ஆவது பிறந்தநாளையொட்டி மீண்டும் இந்த கார் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

புதுப்பொலிவுடன் ‘செவ்ரோலெட் ஸ்டைல்லைன் டீலக்ஸ்’ கறுப்பு நிற கார் மீண்டும் இன்று முதல் மக்கள் பார்வைக்கு சென்னை காமராஜர் அரங்கத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

Related Posts