Home Archive by category

ட்விட்டர் மூலம் இனி வருமானம்

ட்விட்டரில் ப்ளூ டிக் பெற்ற பயனாளர்களுக்கு விளம்பர வருவாயில் ஒரு தொகையை பகிரும் பணி ஆரம்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ஐரோப்பா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் மட்டுமே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் இது பரவலாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது யூடியூபில் பலர் விளம்பர வருமானம் மூலம் வருமானத்தை ஈட்டி வருகின்ற நிலையில் அது ட்விட்டரிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

ப்ளூ டிக் பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பின் பின்னர், பலரும் பணம் செலுத்தி ப்ளூ டிக் பெற்றனர்.

இந்நிலையிலே, ப்ளூ டிக் பெறுபவர்களுக்கு தகுதி அடிப்படையில் ட்விட்டர் விளம்பரம் மூலம் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை பகிர்ந்துக்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தார்.

மிகவும் பிரபல சமூக ஊடகமாக கருதப்படும் ட்விட்டர் செயலிக்கு போட்டியாக த்ரெட்ஸ் செயலி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த செயலி வெளியிடப்பட்டு குறுகிய காலப்பகுதியிலேயே மில்லியன் கணக்கான பயனர்கள் அதில் இணைந்து கொண்டதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

சுமார் இரு ஆண்டுகளுக்கு முன்பு 44 பில்லியன் டொலர்களை கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை எலோன் மஸ்க் கைப்பற்றியிருந்தார்.

ட்விட்டரை கைப்பற்றியதன் பின்னர் தலைமை செயலதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்ட எலோன் மஸ்க் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

குறிப்பாக, நிறுவனத்தின் முக்கிய பதவி நிலைகளிலிருந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்.

மேலும், ஊழியர்கள் மத்தியில் ட்விட்டர் செயலியில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.

இதனால், இது ட்விட்டர் பயனர்கள் மத்தியல் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இவ்வாறானதொரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts