Home Archive by category

இந்தியாவில் இருந்து கொழும்பு வழியாக திருகோணமலைக்கு எரிபொருள் குழாய்

நாகப்பட்டினம், திருகோணமலை மற்றும் கொழும்பை இணைக்கும் எரிபொருள் குழாய் அமைப்பு தொடர்பாக இந்தியன் ஒயில் நிறுவனம் முன்வைத்த பிரேரணை தொடர்பான கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் இடம்பெற்றது.

திருகோணமலை எண்ணெய் தாங்கி அமைப்பு, புதிய சுத்திகரிப்பு அபிவிருத்தி, உள்நாட்டு எரிவாயு விநியோகக் குழாய்கள் என்பன அரசாங்கத்தின் எரிசக்தி அபிவிருத்தித் திட்டத்துடன் அமுல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டத்தைக் கருத்தில் கொண்டு இரட்டைக் குழாய்த்திட்டத்தின் அவசியத்தை அமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.

மேலும், இரு நாடுகளின் எரிபொருள் மற்றும் எரிவாயு தேவைகளை மட்டுமின்றி, பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதை இலக்காகக் கொண்ட திட்டங்கள் நன்மை பயக்கும் முதலீட்டை செய்ய முடியும் என்று காட்டப்பட்டுள்ளது.

திட்டத்தின் நன்மைகள், தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டுத் தேவைகளை அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முன்மொழிவை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, பெற்றோலியம் கூட்டுத்தாபனம், பெற்றோலிய சேமிப்பு முனையங்கள், பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இந்தியன் ஒயில் நிறுவனம் மற்றும் இலங்கை இந்தியன் ஒயில் நிறுவன அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

Related Posts