இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கையில்
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா இலங்கையை வந்தடைந்தார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த வினய் மோகன் குவத்ரா உள்ளிட்ட நால்வர் கொண்ட தூதுக்குழுவை இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் குழுவினால் வரவேற்கப்பட்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக, இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.
அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என்பதும் விசேட அம்சமாகும்.