முல்லைத்தீவில் பெருமளவிலான வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு
![](https://newsadmin.websiteforallbusiness.com/uploads/mull3.jpg)
நீதிமன்ற அனுமதியுடன் முல்லைத்தீவு – அளம்பில் வடக்கு பகுதியில் பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று (திங்கட்கிழமை) காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 13 பெரிய பராக்களும் ஒரு சின்ன பராவும் 82 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் 49 உம 60 மில்லிமீட்டர் மோட்டார் குண்டு ஒன்றும், 6 ஆர் வி ஜி குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 56 கைகுண்டுகளும் ஒரு தொகை தோட்டாக்கள் என பெருமளவிலான வெடிபொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.