Home Archive by category

இலங்கையில் பால்மாவுக்கு மீண்டும் சிக்கல்

அடுத்த வருடம் (2024) பால் மா இறக்குமதியை நிறுத்துவது குறித்து விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இந்த நாட்டின் மொத்த பால் தேவையில் 42% தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.

நாட்டின் பால் தேவையை பூர்த்தி செய்வதற்காக பால் மா இறக்குமதிக்காக வருடாந்தம் அறுநூறு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் செலவிடப்படுவதாகவும், பால் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் பாலை உற்பத்தி செய்யும் திறனை மேம்படுத்த முடியும் என்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சந்தையில் வருடாந்த பால் தேவையை பூர்த்தி செய்ய எழுநூற்று ஐம்பது மில்லியன் லீற்றர் பால் தேவைப்படுவதாக விவசாய அமைச்சு கூறுகிறது.

Related Posts