ஓய்வு அறிவிப்பை திரும்ப பெற்றார் தமிம் இக்பால்

பங்களாதேஷ் அணியில் நட்சத்திர வீரரான தமிம் இக்பால் (Tamim Iqbal) தனது ஓய்வுபெறும் முடிவை திரும்ப பெற்றுள்ளார்.
கடந்த ஆறாம் திகதி பங்களாதேஷ் அணியின் இடது கை தொடக்க துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பால் (Tamim Iqbal) அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்களிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து நேற்றைய தினம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் தமிம் இக்பால் (Tamim Iqbal) இடையிலான சந்திப்பின் நிறைவில் தனது ஓய்வுபெறும் முடிவை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
தமிம் இக்பால் (Tamim Iqbal) 2007ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடது கை தொடக்க துடுப்பாட்ட வீரராக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினர்.
தமிம் இக்பால் (Tamim Iqbal) ஒருநாள் போட்டிகளில் பங்களாதேஷ் அணிக்காக அதிக ஓட்டங்கள் மற்றும் சதங்கள் பதிவு செய்தவர்.
பங்களாதேஷ் அணி சார்பாக தமிம் இக்பால் (Tamim Iqbal)
ஒருநாள் போட்டிகளில் 14 சதங்கள் உட்பட 8313 ஓட்டங்களை பதிவு செய்துள்ளதுடன், சர்வதேச டெஸ்ட் தொடர்களில் 70 போட்டிகளில் 10 சதங்களுடன் 5134 ஓட்டங்களை பதிவு செய்துள்ளார்.