Home Archive by category

ஆஸஸ் தொடரின் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பு - ரிசுசுனாக்கின் கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர் பதிலடி

ஆசஸ்டெஸ்ட்தொடரில் இங்கிலாந்து அணியின் ஜொனி பேர்ஸ்டொவ்வின்; சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பு குறித்த கருத்துமோதல்கள் நீடிக்கின்ற அதேவேளை இந்த விடயம் அவுஸ்திரேலிய இங்கிலாந்து தலைவர்கள் மத்தியிலான வாய்தர்க்கமாக மாறியுள்ளது.

அவுஸ்திரேலிய வீரர்கள் ஆடுகளத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிசிசுனாக்  தெரிவித்துள்ள கருத்துக்களிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் பதிலடி கொடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியர்கள் கிரிக்கெட்டின் உணர்வுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொள்வதாக  ரிசிசுனாக் தெரிவித்துள்ளார்.

இதற்கு தனது டுவிட்டர் கணக்கின் மூலம் பதிலடிகொடுத்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் தனது ஆண்பெண் கிரிக்கெட் அணியினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

எங்கள் ஆண்பெண் அணிகள் குறித்து நான் பெருமிதம் கொள்கின்றேன் இரண்டு அணியினரும் ஆஸஸ் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட்களையும் வெற்றிபெற்றுள்ளனர் என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

தனது நாடு அவுஸ்திரேலிய அணியின் பின்னால் உள்ளது என அவர் தெரிவித்துள்ளதுடன் அதே அவுஸ்திரேலியர்கள் எப்போதும் வெற்றிபெறுகின்றனர் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது அதேஅவுஸ்திரேலியர்கள் -எப்போதும் ஏமாற்றுபவர்கள்  என்ற இங்கிலாந்து அணி ரசிகர்களின் பதிவுகளிற்கு பதிலடி போல அமைந்துள்ளது.

ஜொனி பேர்ஸ்டொவ்  ஆட்டமிழந்த விதம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அவர் ஓவர் முடிந்துவிட்டது என தெரிவிப்பதற்கு முன்பாக தனது கிறீசிலிருந்து வெளியே சென்றார் இதனை அவதானித்த அவுஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் விக்கெட்டை வீழ்த்தி அவரை ஆட்டமிழக்க செய்தார்.

அவுஸ்திரேலிய அணித்தலைவர் தனது அணியினர் விதிமுறைகளிற்கு உட்பட்ட விதத்திலேயே செயற்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

பேர்ஸ்டொவ்ஆட்டமிழந்ததை ஆட்டமிழப்புதான் என  ஏற்றுக்கொணடுள்ள இங்கிலாந்து அணியின் தலைவர் பென்ஸ்டோக்ஸ் எனினும் தனது அணியினர் இந்த வழிமுறையை பின்பற்றி வெற்றிபெற விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

பேர்ஸ்டொவ் ஆட்டமிழந்தாரா இல்லையா என்ற சர்ச்சை ஏற்கனவே கடும்போட்டி மிகுந்ததாக காணப்படும் ஆசஸ் தொடரை மேலும் போட்டி மிகுந்ததாக மாற்றியுள்ளது.

Related Posts