முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போலோவில் அனுமதி
வயிற்று வலி காரணமாக, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர், இன்று வீடுதிரும்புவார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன், எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர், வயிற்றுவலி காரணமாக முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.