Home Archive by category

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க எகிப்து அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டிற்கு வருகை தருமாறு எகிப்து அதிபர் சிசிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று எகிப்து சென்றார்.

இந்நிலையில் அவர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் எகிப்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,

எகிப்து அதிபர் அப்துல் பஹாத் எல் சிசியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி எகிப்து விஜயம் செய்துள்ளார்.

பிரதமர் மோடியின் முதல் எகிப்து பயணம் இதுவாகும். நேற்று மதியம் எகிப்து சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் உற்சாக வரவேற்பு அளித்தார். ராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது.

மேலும் இதையடுத்து பிரதமர் மோடிக்கு இன்று எகிப்து அதிபர் சிசி ஆர்டர் ஆஃப் தி நைல் விருது வழங்கி கவுரவித்தார். இது எகிப்தின் மிக உயரிய விருது. இந்த அங்கீகாரம் இரு நாடுகளுக்கும் இரு சமூகங்களுக்கும் இடையே ஆழமான வேரூன்றிய நட்புறவை அடையாளப்படுத்துவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இந்த பயணத்தின் போது செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு எகிப்து அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

 

 

 

Related Posts