Home Archive by category

ரஷ்ய தாக்குதல்களுக்கு மத்தியில் சுதந்திர தினத்தை கொண்டாடும் உக்ரைன்!

ரஷ்ய தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலான உக்ரைனின் 31ஆவது சுதந்திர தினம் இன்று. 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உக்ரைன், சோவியத் ஆளுகையிலிருந்து விடுபட்டு இறையாண்மை மிக்க நாடாக மாறியது.

இந்நிலையில் உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்து இன்றுடன்(24), 06 மாதங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் உக்ரைன் வரலாற்றில் இது ஒரு முக்கிய நாளாக பதிவாகியுள்ளது.

அதேசமயம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்யாவால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாமென எதிர்வுகூறப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் தலைநகலில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் ஒன்றுகூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு அரச அதிகாரிகளுக்கு வீட்டிலிருந்து பணியாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வௌியாகவில்லை.

Related Posts