Home Archive by category

குரோஷியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்

நேஷனல் லீக் (National League) கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியானது குரோஷியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

நெதர்லாந்தில் உள்ள டி குயிப் (De Kuip) மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற்ற குறித்த போட்டியில் ஸ்பெயின் அணி குரோஷியா அணியை எதிர்கொண்டது.

முதல் பாதியிலும் இராண்டாம் பாதியிலும் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை.

இதன் காரணமாக இரு அணிகளுக்கும் மேலதிக நேரம் கொடுக்கப்பட்ட நிலையில் இரு அணிகளினாலும் குறித்த நேரத்தில் எந்த கோலும் அடிக்க முடியவில்லை

பின்னர், வழங்கப்பட்ட பெனால்டி முறையில் குரேசியா அணி வீரர் நிகோலா விளாசிக் (Nikola Vlašić) முதல் கோலை அடித்தார் இதன் மூலம் குரேசியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

அதன் பின்னர் ஸ்பெயின் அணி வீரர் ஜோசலு (Joselu) அடித்த கோலின் மூலம் 1-1 என்ற கணக்கில் போட்டி சமநிலையில் தொடர்ந்தது.

பின்னர், குரேசியா அணி வீரர் மார்செலோ ப்ரோசோவிக் (Marcelo Brozović) அடித்த கோலின் மூலம் குரேசியா அணி 2-1 என என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

அதற்கு பதிலடியாக ஸ்பெயின் அணி வீரர் ரோட்ரி (Rodri) அடித்த கோலின் மூலம் 2-2 என்ற கணக்கில் போட்டி சமநிலையில் தொடர்ந்தது.

மேலும், குரேசியா அணி வீரர் லூகா மோட்ரிக் (Luka Modrić) அடித்த கோலின் மூலம் குரேசியா அணி 3-2 என என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

பதிலுக்கு, ஸ்பெயின் அணி வீரர் மைக்கேல் மெரினோ (Mikel Merino) அடித்த கோலின் மூலம் ஸ்பெயின் அணி 3-3 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் தொடர்ந்தது.

அடுத்த கோலை குரேசியா அணி வீரர் லோவ்ரோ மேஜர் (Lovro Majer) தவதவற விட்டதன் காரணமாக போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் தொடர்ந்தது.

அதன் பின்னர், ஸ்பெயின் அணி வீரர் மார்கோ அசென்சியோ (Marco Asensio) அடித்த கோலின் மூலம் ஸ்பெயின் அணி 4-3 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

மேலும் தொடர்ந்த போட்டியில், குரேசியா அணி வீரர் இவான் பெரிசிக் (Ivan Perišić) அடித்த கோலின் மூலம் 4-4 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் தொடர்ந்தது.

ஸ்பெயின் அணி சார்பில் அய்மெரிக் லபோர்ட் (Aymeric Laporte)

அடுத்த கோலை அடிக்க தவறியதால் போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் சமநிலையில் தொடர்ந்தது.

தொடர்ந்து, குரேசியா அணி வீரர் புருனோ பெட்கோவிக் (Bruno Petković) கோல் அடிக்க தவறியதால் மீண்டும் போட்டியானது 4-4 என்ற கோல் கணக்கில் சமநிலையில் தொடர்ந்தது.

இறுதியாக ஸ்பெயின் அணி வீரர் டானி கார்வஜல் (Dani Carvajal) அடித்த கோலின் மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் குரேசியா அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

 
 

Related Posts