பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறிய 25 எம்.பிக்கள்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பிலான கலந்துரையாடல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஸோக அபேசிங்ஹ தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவை சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜக்கிய மக்கள் சக்தியின்
பிரதான பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் அஸோக அபேசிங்ஹ மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஜக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும், டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழு அங்கு தீவிரமாக செயற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த குழுவிற்கு மேலதிகமாக மேலும் பல குழுக்கள் எதிர்காலத்தில் ஜக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.