பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து டெல்லியில் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் இந்தியா-அமெரிக்கா இடையேயான வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் திட்டத்தின் கீழ் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தனர்.
வரவிருக்கும் அரசுமுறை பயணத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் சந்திப்பை எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி இதன் போது தெரிவித்தார்.
இந்தியா-அமெரிக்க முன்முயற்சியின் கீழ் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்ட முன்னேற்றம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பின் மற்ற விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி பைடனுடன் கலந்துரையாடப்பட உள்ளது.