செந்தில் பாலாஜி இதயத்தில் 3 அடைப்புகள்... விரைவில் சத்திரகிசிச்சை ... மருத்துவமனை பரிந்துரை
தமிழக மின்சாரத் துறை அமைச்சர்செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் அவர் இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை நள்ளிரவில் கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு 160ஃ100 என்ற அளவில் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. இதனையடுத்துதீவிரகிசி;ச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவர் இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
அதில் ‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ( வயது 47) ரத்தநாள பரிசோதனை இன்று காலை 10.40 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. அப்பரிசோதனையில் மூன்று முக்கியமான குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது” என ஓமந்தூரார் மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.
மறுத்துவமனை அறிக்கை
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி கைதைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் கோவையில் நாளை மறுநாள் 5 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.