இரண்டாவது நாளாக அதிரும் இந்தியாவின் முக்கிய பகுதிகள்..! அச்சத்தில் மக்கள்
![](https://newsadmin.websiteforallbusiness.com/uploads/earth1.jpeg)
இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மலைப்பகுதி மாவட்டங்களான தோடா மற்றும் கிஷ்த்வாரில் நேற்று 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்படது.
இதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன.
இரண்டு பள்ளிக் குழந்தைகள் உள்பட ஐந்து பேர் காயம் அடைந்தனர். முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று(14) காலை அப்பகுதிகளில் மீண்டும் அடுத்தடுத்து நான்கு முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.