Home Archive by category

72 நாடுகள் பங்கேற்கும் கொமன்வெல்த் விளையாட்டு போட்டி நாளை ஆரம்பம்

கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டை போல காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.

கடைசியாக கொமன் வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் 2018-ம் ஆண்டு நடந்தது. இதில் ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது. 22-வது காமன்வெல்த் விளையாட்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நாளை தொடங்குகிறது.

ஆகஸ்ட் 8 -ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து , நியூசிலாந்து, வேல்ஸ், கென்யா, நைஜீரியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

நீச்சல், தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக் உள்பட 20 விளையாட்டுகள் 280 பிரிவுகளில் நடக்கிறது.

 

 

Related Posts