கருணாநிதி பெயரில் பல்கலைக் கழகம்
![](https://newsadmin.websiteforallbusiness.com/uploads/karu.jpeg)
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் செல்பட்டுவரும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும்; அல்லது புதிதாக தொடங்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும். இது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது.
பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரே இருக்கும் வகையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 500 மதுக்கடைகளை மூடுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும்”, என்றார்.