கொழும்பில் திடீரென ஒன்றுகூடிய தமிழ் எம்.பிகள்

இலங்கைத் தமிழரசு கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இன்று இடம்பெற்றது.
குறித்த அரசியல் குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், பின்னர் கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்களின் நீண்ட உரைகள் மட்டுமே இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பாராளுமன்ற உரையிருப்பதாகத் தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
இதனை அடுத்து 12.30 அளவில் கூட்டம் நிறைவடைந்த போதும் தீர்க்கமான கலந்துரையாடல் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.