முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் அலுவலகம் மீது விசமிகள் தாக்குதல் - அச்சத்தில் உறவுகள்

வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தை இனந்தெரியாதோர் தாக்கியுள்ளதுடன், அங்கிருந்த சில புகைப்படங்களையும் திருடியுள்ளனர்.
இச் சம்பவம் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து அலுவலகத்திற்கு அருகில் உள்ள கடைக்காரர், முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி ஈஸ்வரிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து அலுவலகத்திற்கு சென்று பார்வையிட்டபோது, அங்கிருந்த சில புகைப்படங்கள் மற்றும் கதிரைகள் களவாடப்பட்டுள்ளதுடன், கதவுகளும் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி ஈஸ்வரி தெரிவிக்கையில்,
இச் சம்பவத்தால் நாங்கள் அச்சத்தில் இருப்பதாகவும் இப்படியான அச்சுறுத்தல்கள் எங்களுக்கு தொடர்ந்த வண்ணமுள்ளது எனவும் தெரிவித்தார்.