Home Archive by category

வெளிநாடு செல்வதால் மட்டும் முதலீடுகள் வராது... ஆளுநர் ஆர்.என்.ரவி மறைமுக விமர்சனம்

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். பல தொழில் நிறுவன அதிபர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் 9 நாள் பயணத்தை முடித்து, கடந்த மே 31ஆம் தேதி சென்னை திரும்பினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜப்பான், சிங்கப்பூருக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்ததாகவும், இதன்மூலம் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.

இந்நிலையில் உதகையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், முதலீட்டாளர்களை கவரக்கூடிய சூழலை நாம் உருவாக்க வேண்டும் என்றார். வெளிநாடு சென்றால் மட்டும் முதலீட்டாளர்கள் வந்துவிடமாட்டார்கள் என்றும் அவர்கள் கடுமையாக பேரம் பேசுபவர்கள் என்றும் கூறினார். உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், தற்போது தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது. தற்போது வளரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. இன்றைய கால கட்டத்தித்தில் இளைஞர்களுக்கு படிப்பிற்க்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாலிடெக்னிக், ஐடிஐ., மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை விட நல்ல வேலை கிடைகிறது. இதனால் குறைந்த ஊதியத்தில் பொறியாயில் மாணவர்கள் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர்.

இதனால் கல்வியில் மாற்றம் அவசியம். தேசிய கல்வி கொள்கையில் இளைஞர்களுக்கு அவர்களின் திறனுக்கு ஏற்ற கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோனருக்கு ஆங்கில திறன் குறைப்பாடு உள்ளது. பள்ளி பாட அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால் மாணவர்கள் பயன் பெறுவார்கள். பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் மட்டுமே  படிக்க வேண்டும் என்ற சிந்தனையை மாற்ற வேண்டும். இந்த பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும். இளைஞர்களிடையே ஆங்கில மோகம் அதிகரித்துள்ளதால் அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர் என கூறினார்.

Related Posts