சென்னை - இலங்கை இடையேயான முதல் பயணக் கப்பல்! கொடியசைத்து தொடங்கி வைப்பு
சென்னை - இலங்கை இடையிலான முதல் சர்வதேச பயணக் கப்பலான “எம்வி எம்பிரஸ்” நேற்று திங்கட்கிழமை சென்னை துறைமுகத்தில் இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அவர்களால் முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கப்பல் சுற்றுலா முனையத்தின் 172.1 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கப்பலின் திறப்பு விழா சென்னை துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது.
2,880 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கப்பலில் 3,000 பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதி உள்ளது.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இன்க்ரெடிபிள் இந்தியா இன்டர்நேஷனல் க்ரூஸ் மாநாட்டில் உள்நாட்டு மற்றும் சர்வதேச கப்பல் சேவைக்காக சென்னை துறைமுகம் மற்றும் நீர்வழிகள் ஓய்வு சுற்றுலாவுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னணியில் இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் அடுத்த நான்கு மாதங்களில் இந்தியாவில் இருந்து 50,000 பயணிகளை இலங்கைக்கு ஏற்றிச் செல்லும் என கப்பலின் தலைமை அதிகாரி Jurgen Bailom தெரிவித்தார்.
மேலும், சென்னைக்கும் இலங்கைக்கும் இடையே முதல் கப்பல் சேவையை நாங்கள் தொடங்கியுள்ளதால், அது நாட்டில் கப்பல் சுற்றுலாத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது, என்று அமைச்சர் சர்பானந்தா சோனோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ‘கார்டிலியா குரூஸ்’ ( cordelia cruises )கப்பல், இலங்கையின் துறைமுகங்களில் தரித்து நின்று, சுற்றுலா தலங்களுக்கு பிரயாணிகள் செல்லும் வகையில் பக்கேஜ்களையும் அறிமுகம் செய்துள்ளது.
சுற்றுலா பயணிகள் சென்னை திரும்புவதற்கு முன், இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய துறைமுகங்களுக்கு விஜயம் செய்து சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிடவுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் யால அல்லது உடவளவை தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்குகளை பார்வையிடவும் ஆமை குஞ்சு பொரிக்கும் பண்ணைக்கும் செல்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் காலி, டச்சு கோட்டை மற்றும் தியலும நீர்வீழ்ச்சிக்கு செல்லமுடியும்.
திருகோணமலையில், திமிங்கலத்தைப் பார்ப்பது, டொல்பின்களைப் பார்ப்பது, புறா தீவுக்கு செல்வது ஆகியவற்றையும் இறுதியாக, யாழ்ப்பாணத்தில், சுற்றுலாப் பயணிகள் அமைதியான கடற்கரையில் ஓய்வெடுக்கலாம் என்பதுடன், இலங்கையின் புனிதமான கோவில்களை பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.