Home Archive by category

பொதுத் தூபிக்கு பச்சை கொடி..! விக்கி புகழாரம்

சிங்களவர்கள் மனிதாபிமான அடிப்படையில் தமிழர்களுடன் ஒருமித்து செயற்படுவதாகவும் ஆகவே வேற்றுமைகளை பாராது அனைவரும் ஒற்றுமையுடன் பொது தூபியை  அமைப்பது நல்லது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

இலங்கையில் அன்று தொட்டு இன்று வரை வாழ்பவர்கள் தமிழர்கள் மட்டுமே . இடையே பௌத்தத்தின் பிற்பாடு பாலி மொழி வந்ததையடுத்து தமிழ் மொழியிலே பல பாலி சொற்கள் சேர்க்கப்பட்டு கி.பின் 6 ஆம் 7 ஆம் நுற்றாண்டுகளிலே புதிய மொழியாக சிங்களம் வந்தது.

தமிழர்களாயினும் , சிங்களவர்களாயினும்  தம்மை வெவ்வேறு இனங்களாகவே செயற்பட்டு வருகின்றனர். DNA பரிசோதனையின் பிரகாரம் தமிழர்களும், சிங்களவர்களும் ஒரே இனம் என்றே கூறப்படுகின்றது. இவ்வாறே நிலையிலே தான் இரு இனங்களிற்குமிடையே முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டது.

அரசியல்வாதிகளும் இனமுரண்பாட்டினை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்ற மனப்பாங்கில் சிந்தனைகளை பரப்பி வன்மத்தினை ஏற்படுத்த வேண்டும் என செயற்படுகின்றனர்.

இதனையே நான் வித்தியாசமாக பார்க்கின்றேன். ஒருவர் இறந்த பின்னர் அவர் சிங்களவருமல்ல, தமிழருமல்ல. ஆனால் நாம் தான் வேற்றுமை காட்டுகின்றோம்.

இந்த நாட்டில் நாம் தனியீழம் கேட்பதாக இருப்பின், நாம் வேறு அவர்கள் வேறு மற்றும் எம்மை இந்த பிரச்சினைக்கு தள்ளியவர்கள் சிங்களவர்கள் என்ற கருத்தை வெளியிடலாம்.

தொடர்ந்து இந்த நாட்டிலே இருக்க கூடிய அளவிலே தான் எல்லா அரசியல் கட்சிகளும் சமஷ்டியினை கேட்கின்றன. இதன் மூலம் எங்களை நாங்களே ஆளுவதற்குரிய உரிமையினை தருமாறு கேட்பதே எமது சித்தாந்தம்.

ஆனால் இறந்த பின்னர் அவர்களிற்காக நினைவு தூபிகளை கட்டுவது அவர்கள் அனைவரும் இந்த நாட்டின் மக்கள்  என ஏற்றுக்கொள்வதில் என்ன பிழை? 2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது மக்களின் துன்பங்களை  பார்த்த நாட்டின் படைகளும், புலிகளும் ஒன்றிணைந்து உதவினார்கள்.

ஆகவே, மனிதாபிமான அடிப்படையிலே அவர்கள் ஒருமித்தே செயற்படுகின்றனர். ஆகவே வேற்றுமைகளை பாராது அனைவரும் ஒற்றுமையுடன் பொது தூபிகளை அமைப்பது நல்லது.

சிங்களவர்களை இதற்குள் ஏற்றுகொண்ட இந்த அரசாங்கம் தமிழர்களையும் ஏற்றுகொள்ளும் பொழுது அதை வரவேற்க வேண்டும்.

அது மட்டுமன்றி நாம் நினைப்பதை போன்றே சிங்களவர்களும் நினைப்பார்கள். தாம் தானே அவர்களால் பாதிக்கப்பட்டோம். அவர்கள் தனி நாடு கோரினார்கள் என்று பலவிதமாக சிந்திப்பார்கள்.

ஆகவே இறந்த அனைவரையும் எமது நாட்டிலே பிறந்து, வளர்ந்தவர்கள் என்ற அடிப்படையிலே பொதுவான தூபியினை அமைப்பது சால சிறந்தது எனவும் தெரிவித்தார்.

 

 

Related Posts