Home Archive by category

நீங்கள் செய்தது வெட்கம் கெட்ட செயல்; ரணில் மீது சுமந்திரன் குற்றச்சாட்டு

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதம மந்திரியாக பதவி வழங்கியதும் சிறிலங்கா அதிபருக்கு எதிரான தீர்மானத்தில் மாற்றீடாக செயற்பட்டது வெட்கம் கெட்ட செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் அதிபர் சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கு எதிரான தீர்மானத்தை வரைகின்ற போது ரணிலும் இணைந்து தான் செயற்பட்டார் ஆனால் அவருக்கு பிரதம மந்திரியாக பதவி வழங்கியதும் அதற்கு மாறாக செயற்பட்டார். இதனால் தான் நாடாளுமன்றதில் வைத்து ரணில் செய்தது வெட்கம் கெட்ட செயல் என கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து பேசிய போது கூட தான் இதற்கான காரணத்தை விளக்கியதாகவும், பதவி வந்தவுடன் மாற்றீடாக செயற்பட்டது வெக்கம் கெட்ட செயலே என ரணிலிடம் நேரடியாக கூறியதாகவும் சுட்டிக்காட்டினர்.

Related Posts