Home Archive by category

இலங்கை அரசாங்கம் தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை கவலை

பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் அரசாங்கம் புறக்கணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் நியாயமற்ற முறையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் சிறுபான்மையினத்தவர்களை இலக்கு வைத்து பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts