Home Archive by category

பாராளுமன்றம் வருகிறது '22'

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

19 ஆவது திருத்தத்தில் உள்ள சில சரத்துகளை மீண்டும் உள்வாங்கப்பட்டுள்ள அதே வேளையில் 20வது திருத்தத்தை இரத்து செய்வதை இந்த சட்டமூலம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜூன் 24 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இந்த சட்டமூலம் ஜூன் 20 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றது.

இதன்படி, அரசியலமைப்பு பேரவை, இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபடாமல் தடுப்பது, அமைச்சர்களை நியமிப்பதற்கான புதிய நடைமுறை உள்ளிட்டவை இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பெறுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது பல கலந்துரையாடல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts