Home Archive by category

இத்தாலியில் கடும் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு

இத்தாலியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 36 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியின் வடக்கு மாகாணமான எமிலியா-ரோமக்னாவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகளை நீர் சூழ்ந்தது. பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 36 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட எமிலியா ரோமக்னாவில் சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீட்புப் பணிக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் யுனிபோல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனிடையே ஜி7 மாநாட்டிற்கு ஜப்பான் சென்ற இத்தாலி பிரதமர் அவசரமாக நாடு திரும்பினார். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் மாநாட்டில் இருந்து முன்கூட்டியே கிளம்புவதாக இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கூறினார்.

Related Posts