உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த பத்து யோசனைகள் – பிரதமர் மோடி
உலகில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த பத்து யோசனைகளை முன்வைத்து ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்.
உணவுப்பஞ்சம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு உணவுப்பாதுகாப்புத் திட்டம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகளை மேம்படுத்துதல், உணவு வீணாவதைத் தடுத்தல், சத்தான உணவுப் பொருட்கள், அரசியல் இல்லாத உர விநியோம் உள்ளிட்ட விடயங்களை அவர் முன்வைத்துள்ளார்.
மேலும் உடல் நல பாதுகாப்புக்கான டிஜிட்டல் ஹெல்த் முறையை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்களை பிரதமர் மோடி தமது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்