இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளான சீன கப்பல் : 39 பேரை தேடும் பணிகள் தீவிரம்
சீனாவுக்கு சொந்தமான மீன்பிடி கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் சீனாவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கப்பலே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த கப்பலில் சீனாவை சேர்ந்த 17 மீனவர்கள், இந்தோனேசியாவை சேர்ந்த 17 மீனவர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீனவர்கள் 5 பேர் என 39 பேர் பயணித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மேலும் சர்வதேச கடல்சார் மற்றும் மீட்பு உதவிகளை நாடி சீன அதிபர் அழைப்பு விடுத்ததை அடுத்துஇ ஆஸ்திரேலியாஇ பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கடற்படைகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.