ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் மறைவு..! அமர்ந்த நிலையில் ஜீவசமாதி
ரீ நித்தியானந்தம் சுவாமிகள் இன்று ஜீவசமாதி அடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நித்தியானந்தம் சுவாமிகள் பெருமாள் ஜெயலக்சுமி தம்பதிகளுக்கு 5வது பிள்ளையாக 1953ம் ஆண்டு பிறந்தார்.
5வது வயதில் கருத்து வேறுபாட்டால் தாய் தந்தையர் பிரிய இவரது வாழ்க்கை தனிப்பயணமாக மாற ஆன்மீகத்தின் பால் ஈர்க்கப்பட்ட நிலையில் பல்வேறு பட்ட ஆன்மீக கருத்துக்களை மக்களுக்கு கூறி வந்தார்.
இவ்வாறான நிலையில் சமீப காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் திருவள்ளுரில் இன்று அதிகாலை 3மணியளவில் ஜீவசமாதி அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த செய்தியினை கேட்ட அவரது பக்தர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அதேவேளை ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தமது இறுதி அஞ்சலியை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.