Home Archive by category

விடுதலைப்புலிகள் காலத்தில் பௌத்த சின்னங்கள் பேணப்பட்டன

தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்திலும் பௌத்த சின்னங்கள் பேணப்பட்டன என்று சிவகுரு ஆதின முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

வடக்கு - கிழக்கில் இப்போது ஆக்கிரமிப்பு செய்யப்படும் பகுதிகளில் பௌத்தர்கள் இல்லை.

இலங்கை அரசாங்கத்தின் இயந்திரங்களாகிய சிங்கள இராணுவத்தினர், சிங்கள பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் அங்கிருந்து வழிபடுவதற்காக பௌத்த கட்டுமானங்கள் உருவாக்கபடுகின்றதே தவிர பூர்வீகமாக சிங்கள பௌத்தர்கள் வாழ்கின்ற இடங்கள் என்று எதுவுமே கிடையாது.

வடக்கு - கிழக்கில் பூர்வீகமாக பௌத்தர்கள் வாழ்ந்தால், அங்கு வழிபாட்டுக்காக தாங்களாகவே விரும்பி சட்ட திட்டங்களுக்கமைய விகாரை கட்டி வழிபடலாம். அதற்கு நாங்கள் எந்த விதத்திலும் ஆட்சேபனை தெரிவிக்க போவதில்லை.

தென்னிலங்கையில் கோவில் உள்ளது என்றொரு கருத்து உள்ளது. அங்கு தமிழ் மக்கள் செறிந்து வாழ்கிறார்கள். அவர்கள் சட்டத்திட்டத்திற்குட்பட்டு ஆலயங்களை அமைத்துள்ளனர். அதன் நோக்கம் வழிபாடே தவிர ஆக்கிரமிப்பு அடாவடித்தானம் கிடையாது. என கூறியுள்ளார். 

Related Posts