Home Archive by category

பார்சிலோனா சம்பியனாகியது

ஸ்பெய்னின் லா லீகா கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் சம்பியன் பட்டத்தை லா லீகா சுவீகரித்துள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற  இஸ்பான்யோல் கழகத்துடனான  போட்டியில் பார்சிலோனா  4:2 கோல்கள் விகிதத்தில் வென்றது.

இவ்வெற்றியுடன் 34 போட்டிகளில் மொத்தமாக 85 புள்ளிகளைப் பெற்ற பார்சிலோனா, லா லீகா சம்பியன் பட்டத்தை உறுதி செய்துகொண்டுள்ளது. அக்கழகத்துக்கு இன்னும் 4 போட்டிகள் எஞ்சியுள்ளன.

லா லீகா பட்டத்தை பார்சிலோனா 27 ஆவது தடவையாக வென்றுள்ளது.

2019 ஆம்ஆண்டின் பின்னர் அக்கழகம் சம்பியனாகியமை இதுவே முதல் தடவையாகும்.

பார்சிலோனாவின் பரம வைரியான நடப்புச் சம்பியன் றியல் மட்றிட் கழகம் இம்முறை 34 போட்டிகளின் முடிவில்  71 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது.

நேற்று நடைபெற்ற இஸ்பானியோல் கழகத்துடனான போட்டியில் பார்சிலோனா சார்பில் ரொபர்ட் லெவான்டோவ்ஸ்கி இரு கோல்களைப் புகுத்தினார். அலெஹான்ட்ரோ பால்டே, ஜூல்ஸ் கொண்டே ஆகியோர் தலா ஒரு கோல் புகுத்தினர்.

இஸ்பானியோல் கழகத்தின் சார்பில்  ஹாவி புவாதோ ஜோசேலு ஆகியோர் கோல் புகுத்தினர்

இஸ்பானியோல் கழகத்தின் மைதானத்திலேயே இப்போட்டி நடைபெற்றது. போட்டியின் பின்னர் பார்சிலோனா வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை சகித்துக் கொள்ளாத இஸ்பானியோல் கழக ரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்தனர். இதனால் பார்சிலோனா வீரர்கள் மைதானத்திலிருந்து அவசரமாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

Related Posts