Home Archive by category

சூடானில் இருந்து இடம்பெயரவுள்ள 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள்

சூடானில் நடைபெறும் உள்நாட்டு மோதல் காரணமாக குறைந்தது, 4 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இதன்படி  சுமார் 82,000 குழந்தைகள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும், 3 இலட்சத்து 68 ஆயிரம் குழந்தைகள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதாகவும் யுனிசெஃப் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

“சூடானில் நடக்கும் இந்த மோதல் குழந்தைகள் மத்தியில் பேரழிவை ஏற்படுத்தியிருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் ஆழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களை அனுபவித்துள்ளனர் அல்லது உறவினர் பாதுகாப்பைத் தேடி தங்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்டுள்ளனர்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15 அன்று வன்முறை வெடித்ததில் இருந்து 164,000 க்கும் மேற்பட்ட மக்கள் மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், எகிப்து, எத்தியோப்பியா, லிபியா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று ஐநா அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts