Home Archive by category

உலகின் மிக உயரமான தொடருந்து பாலம்..! இந்தியாவில் திறந்துவைப்பு

உலகின் மிக உயரமான பாலமாக கருதப்படும் செனாப் தொடருந்து பாலம் கடந்த 13 ஆம் திகதி இந்தியாவில் திறந்துவைக்கப்பட்டது.

இந்த பாலத்தின் நீளம் 4,314 அடி என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி என்ற இடத்துக்கு இடையே செனாப் ஆற்றின் குறுக்கே 1,178 அடி உயரத்தில் குறித்த தொடருந்து பால கட்டுமான பணி கடந்த 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு அடித்தளம் அமைக்கும் பணி நிறைவடைந்து வளைவுப் பகுதி கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் வளைவுப் பகுதி கட்டுமானம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இந்நிலையில், தற்பொழுது அனைத்து பணிகளும் முடிவடைந்ததால், செனாப் தொடருந்து பாலம் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts