இன்றைய ராசிபலன் – 19 ஆகஸ்ட் 2022
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு குறித்த நேரத்தில் சில விஷயங்களை முடிக்க முடியாமல் போகலாம் திட்டமிட்டு செயல்படுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும். உடல் நலனில் முன்னேற்றம் காணப்படுவீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதைத் தொட்டாலும் அது வெற்றி அடையக்கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே உற்சாகம் தொற்றிக் கொள்ளும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இது வரை இருந்து வந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் இனிய நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் மரியாதை அதிகரிக்கும். ஆரோக்கியம் முன்னேறும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருந்து வந்த உளைச்சல் நீங்கும் நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் செய்யும் தவறுகளை தெரிந்தே செய்யாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களுடைய விஷயங்களில் தலையிடுவது பிரச்சினையை உண்டாக்கும் எச்சரிக்கை வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட பயணங்களை மேற்கொள்ள முடியாமல் போகலாம்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத் தேவைகளை அறிந்து செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகள் கை கொடுக்கும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த சில விஷயங்கள் முடிவுக்கு வரும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய புத்தி சாதுரியத்தால் அனுகூல பலன் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகள் பலருடைய ஆதரவை பெற இருக்கிறது. உற்றார் உறவினர்களின் மத்தியில் மதிப்பு உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஆன்மீக ரீதியான விஷயங்களில் ஈடுபாடு அதிகம் உண்டாகும். வெளியிட பயணங்களின் பொழுது எச்சரிக்கை உணர்வு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வெளியில் தேவையற்ற வாக்குவாதங்கள் தவிர்ப்பது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும் அற்புதமான நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகள் துவங்குவதில் கவனம் தேவை. எடுக்க முடிவுகளில் இருந்து பின் வாங்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வரவுக்கு மீறிய செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. உடல் நலனில் உடனடி கவனம் தேவை.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சில விஷயங்களை எதிர்கொள்ளும் பொழுது அசௌகரியமாக உணரக்கூடும். மற்றவர்களுடைய விஷயங்களில் நீங்கள் சற்று தள்ளியே இருப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன்பிறப்புகளால் வீண் கருத்து வேறுபாடுகள் வரலாம் கவனமுடன் இருப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கையை அதிகரித்து காணப்படும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமான பலன்கள் வரப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண வரவுக்கு ஏற்ற செலவுகளை கையாளுவீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் உதிக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் விருப்பு வெறுப்புகளை தாண்டி மற்றவர்களுக்காக சக்தியை செலவு செய்வது நல்லது. இரக்க குணம் உங்களுக்கு மேன்மை அடைய செய்யும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செய்யும் செயலில் கவனம் தேவைப்படும். அலட்சியம் பல பிரச்சனைகளை உண்டு பண்ணிவிடும் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வாகன ரீதியான பழுதுகளை உடனுக்குடன் சரி செய்து கொள்வது செலவுகளை கட்டுப்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நேரடியாக எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபட வேண்டாம், ஆபத்து உங்களை தேடி வரும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குழப்பங்கள் தவிர்ப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த சிறு சிறு கருத்து வேறுபாடுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக போட்டியாளர்களை திறம்பட வென்று காட்டுவீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிரிகளின் தொல்லை வலுவாகும் என்பதால் விழிப்புணர்வு தேவை. புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இடப்பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பெரிய மனிதர்களின் ஆதரவை பெறுவீர்கள். குடும்ப பொறுப்புகளை புறக்கணிக்க வேண்டாம்.