Home Archive by category

ஜப்பான் செல்லும் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தன்னுடைய முதலாவதாக விஜயமாக ஜப்பானுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இரு தரப்பு கடன் மறு சீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளை அழைப்பதற்காக ஜப்பானிய பிரதமருடன் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார்.

இதேவேளை அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜப்பான் பிரதமர் தனது வாழ்த்தினை தெரிவித்திருந்தார்.

இதனிடையே இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 12 திட்டங்களுக்கான உதவித் தொகையை ஜப்பானின் ஜெய்கா நிறுவனம் நிறுத்துவதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அதிபராகவோ அல்லது பிரதமராகவோ பதவியேற்கும் ஒருவர் முதலில் இந்தியாவிற்கே விஜயம் செய்வது வழமை.ஆனால் இம்முறை ரணில் அதை விடுத்து ஜப்பானுக்கு செல்கின்றமை விதிவிலக்காக அமைந்துள்ளது.

Related Posts