காணித் தகராறு; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொலை
இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்றைய தினம் ( 05.05.2023) இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலம், மொரேனா மாவட்டத்தின் லேபா கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இரு குழுக்களுக்கு இடையிலான காணித் தகராறு, காரணமாகப் பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 8 பேரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.